“உலகமே போர்க்களமாக இருந்தாலும் இந்தியா சேஃப்!" - அதுக்கு மோடி தான் காரணம் - ஜி.கே.வாசன்!

 
ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன்

உலக நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும், இந்தியாவை ஒரு பாதுகாப்பான தீவாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில் "இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் பதற்றமும், மோதல்களும் நிலவி வருகின்றன. பல வல்லரசு நாடுகளே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய மக்கள் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால், அதற்குப் பிரதமர் மோடியின் வலுவான வெளியுறவுக் கொள்கையும், அவரது ராஜதந்திரமுமே முக்கியக் காரணம்."

வாசன்

சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், போர்ச் சூழலில் சிக்கியுள்ள நாடுகளுக்குக்கூட இந்தியா ஒரு வழிகாட்டியாகத் திகழ்வதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஜிகே வாசன்

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா, தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. "மத்தியில் மோடியின் கரத்தைப் பலப்படுத்தவும், தமிழகத்தில் அமைதியான மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஆட்சியை ஏற்படுத்தவும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என வாசன் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.