‘பூத் ஸ்லிப்’ இல்லைன்னாலும் வோட்டு போடலாம் - நிமிஷத்துல ஈஸியா கண்டறிய வழிகள்!

 
தமிழகம் தேர்தல் தமிழகம் தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடி, பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும். இதற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு டிஜிட்டல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் வாக்களிக்க வேண்டிய இடம் எது என்பதை அறிய கீழே உள்ள இணையதளங்களுக்குச் செல்லலாம். https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net ஆகிய இணையதளங்களில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம், உங்கள் வாக்குச் சாவடியின் பெயர் மற்றும் நீங்கள் பட்டியலில் இருக்கும் வரிசை எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் சில நொடிகளில் பெறலாம். இணையதளம் தவிர, ECINET, Voters Helpline மற்றும் Sweetha ஆகிய மொபைல் செயலிகள் மூலமும் இந்த விவரங்களை எளிதாக அறிய முடியும். 

வாக்கு

வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பூத் ஸ்லிப்களில் இந்த முறை கியூ ஆர் கோடு  வசதி உள்ளது. இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் வரிசை எண்ணைத் துல்லியமாக அறியலாம். ஒருவேளை உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைனில் கண்டறிந்த விவரங்களை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்குச் செல்லலாம்.

வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி/தபால் அலுவலக கணக்குப் புத்தகம் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்கு

வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகச் சாவடியின் வெளியே செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தனி அறை மற்றும் டோக்கன் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்த முறை வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துடன் அவரது கலர் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. உங்கள் விவரங்களை இப்போதே சரி பார்த்துக் கொண்டு, இன்று ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்றுங்கள். வாக்குசதவீதத்தை அதிகரிப்போம்.