"என்னைக் கொன்றாலும் சரி... வங்கதேசம் செல்வது உறுதி!" – முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிரடி அறிவிப்பு!

 
ஷேக் ஹசீனா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் தான் தாய்நாட்டிற்குத் திரும்பவுள்ளதாக அதிரடியாகத் அறிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா

இந்தக் காணொலி நிகழ்ச்சியில் பேசிய ஷேக் ஹசீனா, “அங்குள்ள தற்போதைய இடைக்கால அரசு என்னைக் கைது செய்தாலோ அல்லது படுகொலை செய்யத் துணிந்தாலோ கூட, எதற்கும் அஞ்சாமல் எனது தாய்நாட்டிற்குத் திரும்புவது எனது வரலாற்றுக்கடமை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஹசீனா

கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, தற்போது பாதுகாப்புக் கருதி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதற்கிடையே, அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் சூழலில், ஹசீனாவின் இந்தச் சொந்த நாட்டுப் பயணம் குறித்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.