தினமும் குடிபோதையில் தகராறு.. ஆத்திரமடைந்த தந்தை மகனை கொன்ற கொடூர சம்பவம்..!!
Oct 28, 2023, 18:38 IST

குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் வேலுகோடு சிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவருடைய மகன் சீனிவாசலூ. குடிப்பழக்கத்திற்கு அடிமையான தன் மகன் சீனிவாசலூவை, ராமகிருஷ்ணா பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் குடிப்பழக்கத்தை விடாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்தள்ளார் சீனிவாசலூ.
இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணா தனது மகன் சீனிவாசலுவை கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
From around the
web