ஆம்புலன்ஸ்ல எல்லாம் போனாரே... கை விரித்த வேலூர்... நடிகர் மன்சூர் அலிகான் வாங்கிய 41 வாக்குகள்!

 
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு!

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான்  41 வாக்குகள் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் ஆரம்பம் முதலே வேலூர் தொகுதியில் தங்கியிருந்து கடை கடையாக சுற்றி வந்தார் மன்சூர் அலிகான். 

இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் எல்லாம் ஏறி, தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறி, சென்னை திரும்பினார். 

வேலூர் ,ஆம்பூர் ,வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி. குப்பம் , குடியாத்தம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள்  அடங்கியுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். 

அதிமுக சார்பில் பசுபதியும் , பாஜக சார்பில் ஏசி சண்முகமும்,  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மகேஷ் ஆனந்தும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். 

இந்நிலையில் வேலூரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் முதல் சுற்றில் 41 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டு சுற்றுகளில் மொத்தம் 350 வாக்குகள் பெற்றுள்ளார்.

From around the web