“கேடு கெட்ட தவெக ஆட்சி..” திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம்!
மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறை அடக்குமுறைக்குத் திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளதாகக் கனிமொழி எம்.பி. கடுமையாகச் சாடியுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கான தெளிவான தடயங்கள் உள்ள நிலையிலும், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்வதை விடுத்து, நியாயம் கேட்டுப் போராடிய பொதுமக்களைக் கைது செய்வது வண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கோருவோருக்கும் ஆதரவாக இருக்க வேண்டிய அரசு, அவர்களை ஒடுக்கும் செயலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தவெக அரசின் இத்தகைய நடவடிக்கைக்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
