மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது - தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

11-வது மேசையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த ஒரு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மட்டும் தற்போது எண்ணப்படவில்லை. மற்ற இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் நிலவரப்படி, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,571 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன் 2,611 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 2,078 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பழுதான இயந்திரத்தைச் சரிசெய்யும் அல்லது மாற்று வழிமுறைகளின்படி வாக்குகளை எண்ணும் பணிகள் தேர்தல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
