மீண்டும் 34 ஆண்டுகளுக்குப் பின் எம்எல்ஏ... ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த பாதை!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75. அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நாளை நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா(46) கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். மகனின் உயிரிழப்பு இவரை முற்றிலும் கவலை கொள்ள செய்தது.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய திருமகன் ஈவெரா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். அவரது மரணம் கட்சி தொண்டர்களையும், குடும்பத்தினரையும் உலுக்கியிருந்தது.
அவரது வெற்றிடத்தை நிரப்ப, ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் திருமகன் வகித்து வந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 34 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் 1984ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக சட்டப்பேரவைக்குள் முதல் முறையாக நுழைந்து அரசியல் வாழ்வை வெற்றியோடு தொடங்கினார். 1989ல் பவானிசாகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக உறுப்பினரிடம் தோல்வியடைந்த பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

காங்கிரஸ் கட்சியில் முன்னிலை வகித்து வந்த ஈவிகேஎஸ் தொடர்ந்து மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநில தலைவர் என அடுத்தடுத்து உயர் பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து வந்தார். அதே நேரத்தில் கட்சியில் முக்கிய தலைவராகவும் அரசியலில் தனக்கென ஒரு இடத்தையும் உருவாக்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தவர். அதன்பிறகு, சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் மறைவால், சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, அரசியல் வாழ்வைத் தொடங்கினார். மீண்டும் தன்னை பழையபடி எம்எல்ஏவாகி, சட்டப்பேரவைக்குள் நுழைந்திருந்த நிலையில்தான், உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
