EVM இயந்திரத்தில் பழுது.. மதுராந்தகம் வாக்குவாதம் செய்ததால் சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றம்!

 
மதுராந்தகம் சுயேட்சை

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு நிலவரம்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11-வது வாக்குச்சாவடிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்த நிலையில், அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளைச் சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

பழுதடைந்த இயந்திரத்தின் வாக்குகள் முழுமையாக எண்ணப்படாமல், அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீரெனக் கேள்வி எழுப்பினார்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

தேர்தல் விதிகளுக்கு மாறாக வாக்கு எண்ணிக்கை பணியில் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த சுயேச்சை வேட்பாளரை காவல்துறையினர் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.