சூப்பர்... முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... குவியும் வாழ்த்துக்கள் !

 
மைக்கேல் கிளார்க்


 
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்  64வது நபராக ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.



இந்த விருது வழங்கும் விழா இன்று ஜனவரி 23ம் தேதி  வியாழக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில், "8,600 டெஸ்ட் ரன்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வாழ்த்துகள்" என பதிவிடப்பட்டுள்ளது.   இவர் தனது 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.


சிட்னியில் மட்டும் அதிகபட்சமாக 329 ரன்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்குப்பவர்  மைக்கேல் கிளார்க். தனது 43 வது வயதில்  கிளார்க் 2013/14 சீசனில் 5-0 என ஆஷஸ் தொடரினையும் 2015ல் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்று சாதனை படைத்தது ரசிகர்களிடையே நீங்கா நினைவாக அமைந்துவிட்டது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!