அமலாக்கத்துறை அதிரடி... முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

 
கேடிசிங்


நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி.சிங்கின் ரூ.29 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு மாநில முதல்வர்களும் தப்பவில்லை.

கேடிசிங்

டெல்லியில் மணிஷ் சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தமிழகத்தில் செந்தில் பாலாஜி என பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

வருமான வரி

பொதுமக்களிடமிருந்து இவரது நிறுவனம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும், முதலீட்டுக்கு அதிக வட்டி, கூடுதலாக வீட்டு மனைகள் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
இதனடிப்படையில் அல்கெமிஸ்ட் குழுமத்துக்குச் சொந்தமான ரூ.29.45 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web