தமிழகம் முழுவதும் முழு ஆண்டு தேர்வு தேதிகள் மாற்றம்!

 
தேர்வு
 

 தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில்  முழு ஆண்டு தேர்வை அதற்கு முன்பே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தேர்வு தேதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டன.  தேர்வு பட்டியல் தேதிகளில் இடையில் ஈகை திருநாள் வர உள்ளது .

மாணவிகள்

1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க  வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அவை பரிசீலிக்கப்பட்டு தேர்வு கால அட்டவனையில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

மாணவிகள்
தமிழகத்தில் உள்ள  அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024ம் தேதிக்கும் 12.04.2024 ம் தேதி நடைபெறுவதாக இருந்த  சமூக அறிவியல் தேர்வு 23.04.2024ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அட்டவணையின் படி   தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல்கள் சீரிய முறையில் வழங்கப்பட  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web