நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம்.. யார் யாருக்கெல்லாம் விலக்கு? முழு விபரம்!

 
கட்டணம்

தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் நாளை நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  அரசுத் தேர்வு இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள்  நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

தேர்வு

கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாணவர்கள் ரூ.225 மற்றும் ரூ.175 என இரண்டு விதமான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை  www.dge.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம். தமிழ் வழியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்  அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் அல்லாத பிறமொழியில் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி & எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எஸ்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் எம்பிசி வருமான உச்சவரம்பு ஏதுமின்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

அதே போல் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோர்கள் சம்பாதிக்கும் BC/BCM சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார், மெட்ரிகுலேஷன் மற்றும் மிஷனரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தில் தள்ளுபடி பெறத் தகுதியற்றவர்கள். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வு ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web