உச்சக்கட்டத்தில் பரபரப்பு.. இந்தியர்கள் சென்ற சரக்கு கப்பலை சிறைப்பிடித்த ஈரான்!

 
சரக்கு கப்பல்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் வெடித்ததில் இருந்து காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இஸ்லாமிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.  ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு பெற்றுள்ள சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் உள்ள அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.  இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

கப்பலில் 17 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்காக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்தியா கூறியது. 17 இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் விரைவான விடுதலையை உறுதி செய்ய தூதரகம் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக, இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web