பிரச்சாரத்தில் பரபரப்பு... அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன் - வைரலாகும் வீடியோ!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை முகத்தில் செல்போன் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சார வாகனத்தில் வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
Annamalai | BJP | Election Campaign | பறந்து வந்து அண்ணாமலை முகத்தில் பட்ட செல்போன்.. திடீர் பரபரப்பான பிரசாரம் #annamalai #BJP #electioncampaign #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection… pic.twitter.com/ojUippvHCQ
— Thanthi TV (@ThanthiTV) April 13, 2026
அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியால் அண்ணாமலை மீது பூக்களைத் தூவி வரவேற்றனர். அந்தப் பூக்களோடு சேர்த்து யாரோ ஒருவர் கையில் வைத்திருந்த செல்போனும் எதிர்பாராத விதமாக அண்ணாமலையின் முகத்தில் வந்து விழுந்தது.
செல்போன் முகத்தில் பட்டவுடன் அண்ணாமலை ஒரு நிமிடம் திகைத்துப் போனார். இருப்பினும், உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவர், கீழே விழுந்த அந்த செல்போனை எடுத்து சிரித்தபடியே உரியவரிடம் ஒப்படைத்தார். திட்டமிட்டு வீசப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், பூக்களைத் தூவும்போது தவறுதலாகக் கையிலிருந்து நழுவி விழுந்திருக்கலாம் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அண்ணாமலை நிதானமாகச் செயல்பட்ட விதத்தைப் பாஜக தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.
