காலை முதலே பரபரப்பு... தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் - இதுவரை 3,400-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன!

 
விஜய் வேட்புமனு விஜய் வேட்புமனு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய இந்த நடைமுறையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதுவரை மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆண் வேட்பாளர்களிடம் இருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடம் இருந்து 698 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிட இதுவரை 84 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவே தமிழகத்திலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஸ்டாலின் வேட்புமனு

வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று, தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றன. காங்கிரஸ் (திமுக கூட்டணி) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் இன்று வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்கின்றனர்.

அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் 27 தொகுதி பாஜக வேட்பாளர்களும் இன்று தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். இன்று இறுதி நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தேர்தல் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே மனுக்கள் ஏற்கப்படும்.

அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்... மாநிலங்களவை தேர்தல்!

பிற்பகல் 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் வரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படும். எவ்வளவு நேரமானாலும் இன்று மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7ல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப்ரல் 9ல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 23ல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.