முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி ஷர்மிஸ்தா மாயம்!

 
நேபாள்

திபெத் எல்லைக்கு அருகில் நேபாளப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரன்ஷு ராயின் மனைவி ஷர்மிஸ்தா பௌமிக் ராய் உள்ளிட்ட பலர் மாயமாகியுள்ளனர்.

கொல்கத்தாவிலிருந்து கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்காக ஷர்மிஸ்தா பௌமிக் ராய் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் கியிரோங் பகுதியில் தங்கியிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவருடனான தொலைத்தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

நேபாள்

க டந்த ஆகஸ்ட் 25 அன்று இரவில்தான் சுப்ரன்ஷு ராய் தனது மனைவியுடன் கடைசியாகப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த பேரிடர் நிலை அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.