எகிறும் எதிர்பார்ப்பு... 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டப்பேரவை!
Updated: Aug 31, 2026, 06:17 IST
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் இன்று ஆகஸ்ட் 31 தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் முதல் நிகழ்வாக உறுப்பினர்களின் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு விடை அளிக்கப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வேளாண் துறை ஆகிய முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
முக்கியமான துறை சார்ந்த விவாதங்கள் மற்றும் கேள்விகள் இடம்பெற உள்ளதால் இன்றைய பேரவை அமர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
