எகிறும் எதிர்பார்ப்பு... இன்று ஆசிய விளையாட்டில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரங்கள்.. பவானி தேவி தங்கம் வெல்ல வாய்ப்பு!

 
இந்த வாள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும்! முதல்வரை சந்தித்த பவானி தேவி நெகிழ்ச்சி!

ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இன்றைய நாளி்ல், பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தக் களமிறங்குகின்றனர்.

இன்றைய முக்கியப் போட்டிகளின் அட்டவணைப்படி வாள்வீச்சு போட்டியில் பெண்களுக்கான சாப்ரே தனிநபர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பவானி தேவி காலை 8.15 மணி முதல் களமிறங்கிப் போட்டியிடுகிறார்.

ஆஇச்

ஆண்களுக்கான கபடி லீக் சுற்றில் இந்தியா மற்றும் சீன தைபே அணிகள் காலை 9.45 மணிக்கு மோதுகின்றன. பெண்களுக்கான கபடி லீக் சுற்றில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மாலை 4.15 மணிக்கு மோதவுள்ளன.

ஆண்களுக்கான குத்துச்சண்டை 70 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சுமித், ஈராக் வீரர் அல் சாரே அலி காசிமை எதிர்த்து காலை 10.30 மணிக்குப் போட்டியிடுகிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆண்களுக்கான ஹாக்கி  லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் தென்கொரியா அணிகள் பகல் 11.30 மணிக்குக் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய மகளிர் ஹாக்கி

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிரனதி நாயக் பிற்பகல் 2.25 மணிக்குத் தங்கம் வெல்லும் குறிக்கோளுடன் களமிறங்குகிறார்.

பெண்களுக்கான தடகளம் டிரிபிள் ஜம்ப் போட்டியில் ஆஷா இளங்கோ மாலை 4.14 மணிக்குத் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்று மாலை 5.55 மணிக்குத் தொடங்குகிறது; இதில் இந்தியாவின் சீமா பங்கேற்கிறார்.