போட்றா வெடிய... 2025ல் வழக்கத்தை விட கூடுதல் மழைப்பொழிவு... இந்திய வானிலை ஆய்வு மையம்!

2025ம் ஆண்டிற்கான பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ,2025ல் வழக்கத்தை விட கூடுதலான மழைப்பொழிவை தர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அந்த அறிக்கையில் பருவ மழை இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக, 105 சதவீதம் பெய்யக்கூடும்.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை பொதுவாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் துவங்கி செப்டம்பர் நடுப்பகுதியில் பின்வாங்கத் தொடங்கும். நடப்பாண்டை பொறுத்தவரை எதிர்பார்க்கப்படும் சராசரியை விட அதிகமாக பெய்யும் மழை விவசாயத் துறைக்கு பேருதவியாக இருக்கும். எல்நினோ முடிவடைந்து, லா நினா நிலை 2025 பருவமழைக்கு ஆதரவாக இருக்கலாம்.
இது இந்தியாவில் நல்ல மழைப்பொழிவுக்கு உதவக்கூடிய காரணியாகும். இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் சாதகமான மழைப்பொழிவு நிலைமைகளால் பயனடையக்கூடும் என கணித்துள்ளது. இந்தியாவில் ஒரு சில பகுதிகளைத் தவிர. நான்கு மாத பருவமழை காலத்தில் லடாக், வடகிழக்கு மற்றும் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பருவமழை விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்திற்கு நல்ல வாய்ப்புகளை தரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!