போட்றா வெடிய... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஆக.21ல் 'ஜெயிலர்-2' முதல் பாடல் ஆக.21ல் வெளியீடு!

 
ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர்-2' திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோருடன், இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.   இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தயாரிப்புப் பணிகளும் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  

ஜெயிலர் மேக்னா ராஜ்

திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.   அனிருத்தின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகவுள்ள தகவல் ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.