சிரியாவில் ஆயுத சேமிப்புக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து - 14 பேர் பலி;11 பேர் படுகாயம்!

 
சிரியா

சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகரில் அமைந்துள்ள ஆயுத சேமிப்புக் கிடங்கில் திடீரென நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவின், சர்மடா நகரில் செயல்பட்டு வந்த ஆயுத சேமிப்புக் கிடங்கில் எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆயுதக் கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்துப் பாதுகாப்புப் படையினரும் அதிகாரிகளும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.