பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து.. ஒரு பெண் தீயில் கருகி பரிதாப பலி.. 6 பேர் படுகாயம்!

 
 தாதபட்டி பட்டாசு ஆலை

விருதுநகர் அருகே தாதபட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன் ராஜுக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஊழியர்கள் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

பட்டாசு விபத்து

இந்நிலையில், மதியம் உராய்வு காரணமாக பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. வெடிவிபத்தில் 6க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொழிற்சாலையில் தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டு வருவதால், தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, ​​வெடிப்பின் குறைந்த சத்தம் காரணமாக, தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 அறைகளும் முற்றிலுமாக எரிந்துவிட்டதால், இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் ஒரு பெண் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web