தென்காசியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்து 2 குழந்தைகள் படுகாயம்!

 
வெடித்து தீவிபத்து

தென்காசி மாவட்டம் அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள வீட்டில் ஆபத்தான முறையில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். திடீரென ஏற்பட்ட வெடிச்சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுப் படுகாயமடைந்த குழந்தைகளைப் மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் எதற்காக வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.