எக்ஸ்பிரஸ் டெலிவரி... இனி புக் செய்தால் 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்!

 
சிலிண்டர்

சமையல் எரிவாயு விநியோகத்தில் புதிய புரட்சியாக இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையிலான இலகுரக கலவை சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் ஆர்டர் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் வீடு தேடி வரும் ‘எக்ஸ்பிரஸ் டெலிவரி’ சேவையை இன்டேன் நிறுவனம் தொடங்கியுள்ளது.

5 கிலோ 'சோட்டா' மற்றும் 10 கிலோ 'எக்ஸ்ட்ராலைட்' கலவை சிலிண்டர்களை ஆர்டர் செய்த 4 மணி நேரத்திற்குள் டெலிவரி பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பைபர் கலவையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டர்கள் எடை குறைவாக இருப்பதால் கையாள்வதற்கும் மாற்றுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

ர்ஃபெச்ஃப்

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான டெலிவரி நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும், குறைந்தளவிலான ஆவண நடைமுறைகளும் இதில் அடங்கும். 5 கிலோ சிலிண்டர் முதல் முறை புதிய இணைப்பு பெற வைப்புத் தொகையுடன் சேர்த்து ₹3,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 கிலோ சிலிண்டர் புதிய இணைப்பிற்கு வைப்புத் தொகையுடன் சேர்த்து ₹5,002 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை குறைந்த எடை கொண்ட பிரீமியம் சிலிண்டர்களுக்கு மத்திய அரசின் எல்.பி.ஜி மானியம் கிடைக்காது.

தற்போது முதற்கட்டமாகக் கோயம்புத்தூர், புனே, குருகிராம் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 25 நகரங்களுக்கும், அக்டோபர் இறுதிக்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதே போன்று இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் விரைவில் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், மீனம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்கள் விற்பனைக்கு வரவுள்ளன. வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளைப் பெறவும் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

,;

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இருந்து IndianOil ONE செயலியைப் பதிவிறக்கம் செய்து எளிதாக முன்பதிவு செய்யலாம். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளமான cx.indianoil.in மூலமாகவும் பதிவு செய்யலாம். விரைவில் இன்டேன் நிறுவனம் 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் எக்ஸ்பிரஸ் டெலிவரி முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.