ஏப்ரல் 1 வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து.... பயணத்த திட்டமிட்டுக்கோங்க!

 
ரயில்கள்
 

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ரயில் பாதை பணிகள் பராமரிப்பு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மாா்ச் 29ம் தேதி  முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து காலை 8.20க்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது
திருநெல்வேலியில் இருந்து காலை 710க்கு புறப்படும், 06642 நாகர்கோவில் ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து மாலை 6.50க்கு புறப்படும், 06647 திருநெல்வேலி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 திருநெல்வேலி ரயில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்
கன்னியாகுமரியில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும் 06773 கொல்லம் ரயில், மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்லத்தில் இருந்து காலை 11.35க்கு புறப்படும் 06772 கன்னியாகுமரி ரயில், மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும் 06435 நாகர்கோவில் ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்துடன்  06670/06771 கொல்லம் – ஆலப்புழா – கொல்லம் மற்றும் 06425 கொல்லம் – திருவனந்தபுரம் ஆகிய ரயில்களும் இன்று மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web