மதுரையில் பற்களால் 35 கிலோ சைக்கிளைத் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று முன்னாள் ராணுவ வீரர் சாதனை!

 
பற்களால் சைக்கிள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது அசாத்திய உடல் வலிமையையும் பற்களின் உறுதியையும் நிரூபிக்கும் வகையில் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளைப் பற்களால் கவ்வித் தூக்கி நடந்து சாதனை படைத்துள்ளார்.

பொதுவாக மனிதர்கள் கைகளால் தூக்குவதற்கே சிரமப்படும் 35 கிலோ எடையுள்ள இரும்பு சைக்கிளை, கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்துள்ளார்.

பற்களால் சைக்கிளைத் தூக்கிய நிலையிலேயே சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நேராக நடந்து சென்று தனது விநோத சாதனை முயற்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரரின் இந்த வியத்தகு முயற்சியையும் உறுதியையும் நேரில் பார்த்த திருமங்கலம் பகுதி பொதுமக்கள் கைதட்டித் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், இவரது அசாத்திய சாதனை குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.