பள்ளி ஆசிரியரின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய முன்னாள் மாணவன்.. விசாரணையில் அதிர்ச்சி!

 
சத்யா

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகர் ஜான். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்ற கிருபாகர் ஜான் மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகை, 100 கிராம் வெள்ளி, 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உணவு வினியோகம் செய்பவரின் உடையில் இருந்த உணவை வாலிபர் ஒருவர் வந்து திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த சத்யா (20) என்பவரை போலீசார் கைது செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வெளியிடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட சத்யா, கிருபாகர் ஜான் ஆசிரியராக பணிபுரியும் அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள தந்தைக்கு ஜாமீன் வழங்க பணம் தேவைப்பட்டதால் தான் திருட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு வழங்கும் ஊழியர் போல் உடை அணிந்து சென்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதற்காக, உணவு வழங்கும் ஊழியர்கள் பயன்படுத்தும் பனியன் அணிந்து திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, முன்னாள் மாணவர் சத்யாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி, 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பள்ளி ஆசிரியரின் வீட்டில் முன்னாள் மாணவன் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web