கால அவகாசம் நீட்டிப்பு! சென்னை மாநகராட்சி அதிரடி !

 
கால அவகாசம் நீட்டிப்பு! சென்னை மாநகராட்சி அதிரடி !


தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக தொடர் ஊரடங்கு அறிவிக்கப் பட்டிருந்தது. இதனால் அரசாங்கத்தின் அன்றாடப் பணிகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் வரி வசூலிக்கும் பணிகள் பெரும்பாலான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் வருவாய் வந்து கொண்டிருந்தது.

கால அவகாசம் நீட்டிப்பு! சென்னை மாநகராட்சி அதிரடி !


சென்னை மாநகராட்சியில் இதுவரை 73,665 பேர் தொழில் உரிமம் பெற்றுள்ளனர். சொத்து வரிக்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தகுந்த அளவில் தொழில் உரிமம் புதுப்பித்தல் மூலம் வருவாய் கிடைக்கிறது.
வழக்கமாக தொழில் உரிமத்தை ஒவ்வொரு நிதியாண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் 30ம் தேதிக்குள் புதுப்பிப்போருக்கு தொழில் உரிமக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.


மே 1ம் தேதி முதல் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அதில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி வருவாய் துறையினர் மார்ச் மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால், பொரும்பாலானோரின் தொழில் உரிமம் புதுப்பிக்கப் படவில்லை.

அதனால் ஏப்ரல் 30ம் தேதி வரை அபராதமின்றி தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அவகாசத்தை நீட்டித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் தொழில் உரிமத்தை அபராதமின்றி புதுப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 45,859 உரிமங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய உத்தரவு மூலம், உரிமம் புதுப்பிக்காத 27,806 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web