ரூ2000 நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு?!

 
ரூ2000


 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ2000 நோட்டுக்களைத் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி இதனை மாற்ற கால அவகாசம் செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரூ2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும், செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும்  அதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனையில் செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

2000


மே 19, 2023  நிலவரப்படி  இந்தியா முழுவதும்  மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ரூ2000   நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. தற்போது  இதில், 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இவை  வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளன.  

2000 money rupees

இதுவரை 88 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன.  ரூ 42000 கோடி  மட்டுமே இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. இதுவரை  பெறப்பட்ட ரூ2000  நோட்டுகளில், 87 சதவீதம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டவை  மேலும் 13 சதவீதம் நோட்டுகள் மாற்றப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளது.  மேலும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என்பது குறித்து  செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web