தொடர் மழை... ஃபெங்கல் புயல்... மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

 
செந்தில் பாலாஜி

தமிழகத்தில் பல பகுதிகளில் ஃபெங்கால் புயல் காரணமாக   கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று நவம்பர் 30ம் தேதி  வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே கூட வர முடியாத அளவில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில்   மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

மின் கட்டணம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “தமிழக அரசு  போர்க்கால அடிப்படையில்  நிவாரணப் பணிகளை  மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு இன்று  30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web