டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம்... நடுரோட்டில் பேருந்து நடத்துநரை விளாசிய இளம்பெண்!

 
டிக்கெட் நடத்துநர்

கோயம்புத்தூரில் தனியார் பேருந்தில் டிக்கெட் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் பயணியும் நடத்துநரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணாசாலை அருகே காந்திபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரூ.7 கட்டணம் வசூலிக்க வேண்டிய இடத்திற்கு ரூ.10 கேட்டதாகக் கூறி பெண் பயணி நடத்துநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் சொகுசு ஆம்னி பேருந்து

நடத்துநர் தன்னைத் தரக்குறைவாகப் பேசியதாகப் பெண் குற்றம்சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் கைகலப்பாக மாறி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.