வெடித்த கோஷ்டி மோதல்.. பாதியில் நிறுத்தப்பட்ட திமுக தேர்தல் பிரச்சாரம்!

 
கே.பி.சங்கர் - கலாநிதி வீராசாமி

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வாக்கு சேகரிக்க சென்றபோது, திருவொற்றியூர் 1வது வார்டு திமுக எம்எல்ஏ சிவக்குமார், பிரசார வாகனத்தில் ஏறி மாலை அணிவிக்க முயன்றார் . அப்போது அப்பகுதி மக்கள் வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை கண்டுக்கொள்ளாத கே.பி.சங்கரை முற்றுகையிட்டு மறியலில் ஈடுப்பட்டனர்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கூறுகையில், ""எதுவாக இருந்தாலும் ஊர் கோவிலில் அமர்ந்து பேசலாம்'' என்று கூறியதையடுத்து, தாழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிராமக் கோவிலில் அனைவரும் அமர்ந்து பேசினர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடும் கலாநிதி வீராசாமி அவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கே.பி.சங்கர் கேட்டு கொண்ட நிலையில்,  கலாநிதி வீராசாமியும் உறுதியளித்தார்.

அப்போது, மீண்டும் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க அனைவரும் ஒன்றாக சென்றபோது, சிவக்குமாரின் உறவினர் போராட்டம் நடத்திய நபரை தாக்கினார்.  இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட நிலையில் கலாநிதி வீராசாமியை மற்ற நிர்வாகிகள் அவசரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சிவக்குமார் தரப்பினரை பாதுகாப்புடன் போலீசார் வெளியேற்றினர், ஆனால் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு தரப்பினர் தொடர்ந்து சென்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டு, வேட்பாளர்கள், நிர்வாகிகள் உட்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து அவசரமாக காரில் ஏறிச் சென்றனர். தொடர்ந்து போலீசார் இருப்பதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. கோவிலில் கூட்டம் முடிந்ததும், சிவக்குமார் தனது கழுத்தில் இருந்த கட்சி துண்டை வாகனத்தில் இருந்து கீழே இருந்த ஆதரவாளர் மீது வீசியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web