ரூ.500 கோடி விவகாரம்: சர்ச்சைக்குரிய ஆடியோ தடயவியல் ஆய்வு செய்யப்படும் – பட்னாவிஸ் உறுதி!
மகாராஷ்டிரத்தில் ரூ.500 கோடி பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டுப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ஜரங்கே வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு தடயவியல் முறையில் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
நாகபூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த உரையாடல் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியானது ஏன், அதன் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கும் விசாரணையில் விடை கிடைக்கும் என்றார்.
சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே மூலம் தமக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டதாக ஆடியோவில் பேசப்படுவதாக ஜரங்கே குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ளார். ஆடியோவின் உண்மைத்தன்மை இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை, அதில் இடம்பெற்றுள்ள குரல்களின் அடையாளம், பதிவு திருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
