ஆணுறுப்பு சிகிச்சைத் தோல்வி... பிரபல இன்ஃப்ளூயன்சர் உயிரிழப்பு!

 
அறுவை சிகிச்சை

சமூக வலைதளங்களில் தங்களது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காகவும், அழகை மெருகேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பல்வேறு அழகுப் பணிகளும் அறுவை சிகிச்சைகளும் சில நேரங்களில் ஆபத்தில் முடிவது உலகளவில் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், ஆண்குறியின் அளவை அதிகரிப்பதற்காகத் தாய்லாந்து நாட்டில் தவறான மற்றும் முறையற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்ட நைஜீரிய-பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் ஈகோ உபிரிபோ (43) உயிரிழந்த சம்பவம் மருத்துவ உலகிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டு பிரபலமாகத் திகழ்ந்த ஈகோ உபிரிபோ, கடந்த மார்ச் மாதம் தனது மனைதியுடன் சுற்றுலா மற்றும் தனிப்பட்ட விவகாரமாகத் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் அழகுக்கலை மற்றும் அறுவை சிகிச்சை மையத்தில், தனது ஆண்குறியின் அளவை அதிகரிப்பதற்கான அறுவை சிகிச்சையை அவர் செய்துகொண்டுள்ளார்.

பொதுவாக இது போன்ற நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்கு மிகத் துல்லியமான மருத்துவ முறைகளும், தொடர் கண்காணிப்பும் தேவைப்படும். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட தவறான அறுவை சிகிச்சை முறைகள் அவரது உடலில் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பிந்தைய கட்டப் பராமரிப்பு மற்றும் உடல் மசாஜ் (Post-operative massage) சிகிச்சையின் போது அவருக்கு எதிர்பாராதவிதமாகச் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் அவர் திடீரெனத் தனது சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனையில், அவருக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவரது நுரையீரலில் கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அவரது திடீர் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்றும் கண்டறியப்பட்டது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆடம்பரமாக வலம் வந்த ஈகோ உபிரிபோவின் மறைவு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதிச் சடங்கின் போது, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பரமான மற்றும் விலைமதிப்பற்ற சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் அனைவரையும் மேலும் வியப்பில் ஆழ்த்தின.

உடல் அழகை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இது போன்ற ஆபத்தான மற்றும் முறையற்ற அறுவை சிகிச்சைகள் எந்த அளவிற்கு உயிருக்கு ஆபத்தானவை என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது. சமூக ஊடகப் பிரபலங்களின் இத்தகைய விபரீத முடிவுகள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.