சீனாவில் இருந்து இறக்கப்பட்ட போலி சாதனங்கள்.. தட்டிதூக்கிய சென்னை அதிகாரிகள் !!

 
சீனா

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான வகைகளை சேர்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என கணக்கில் அடங்காதவை இதில் இடம்பெறும். அதேநேரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து தர நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.

சீனா

அந்த வகையில், இந்திய தர நிர்ணயக் கழகத்தின் சென்னை கிளை அலுவலகம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் இணைந்து, சென்னை, ராயபுரம் கன்டெய்னர் சரக்கு முனையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சீனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட 672 எல்இடி லைட்டிங் செயின்கள், 10 ஆயிரம் பிளக்குகள் மற்றும் கேபிள்கள் அசெம்பிளி ஆகியவை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

சீனா

அதன் தரம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்தபோது, போலி பிஐஎஸ் தர முத்திரை கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் குற்றத்துக்காக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய தர நிர்ணயக் கழகம் தெரிவித்துள்ளது.