நீட் மாணவி கடத்தல் போலி... ஆண்நண்பருடன் வெளிநாடு செல்ல தந்தையிடம் நாடகமாடியது அம்பலம்!

 
நீட்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நீட் தேர்வு பயிற்சி மாணவி, தன்னை கடத்தியதாக போலியாக கூறி, தனது பெற்றோரிடம் ரூ. 30 லட்சம் கேட்டு வெளிநாட்டுக்கு ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்றது அம்பலமாகியுள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு நீட் தேர்வு படிப்பிற்காக சென்ற காவ்யா எனும் இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்திருந்த நிலையில், இன்னும் கவிதா கண்டுபிடிக்கப்படவில்லை.

நீட்

காவ்யா என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், தனது தாயுடன் கோட்டாவில் உள்ள விடுதியில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். மூன்று நாட்களே காவ்யா விடுதியில் தங்கியிருந்ததாகவும், பின்னர் தனது தோழி ஒருவருடன் இந்தூருக்குப் பயணம் செய்ததாகவும், அவரும் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
கவிதா, தான் ராஜஸ்தானின் பயிற்சி மையத்தில் இருப்பதாக பெற்றோரை ஏமாற்றுவதற்காக படங்களையும் செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். 
கடந்த மார்ச் 18 அன்று, மாணவி கவிதாவின் தந்தை ரகுவீர் தாகத், தனது மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, கோட்டா காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் தன்னிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும், தங்கள் மகளின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் படங்களையும் தனக்கு அனுப்பியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்து, வாட்ஸ் -அப்பில் பகிரப்பட்டிருந்த படங்களைக் காட்டினார். 

 

நீட்

 

விசாரணையில், காவ்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை மாலை இந்தூரில் கண்டுபிடித்தனர். காவ்யா கோட்டா விடுதியில் மூன்று நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததாகவும், அவரது தாயார் சென்ற பிறகு, அவர் இந்தூருக்குச் சென்று தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது.
பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் வகுப்புத் தேர்வுகள் குறித்தும், வகுப்புகளில் தனது இருப்பு குறித்தும் செய்திகளை அனுப்பி பெற்றோரை ஏமாற்றி, நம்ப வைத்துள்ளார் காவ்யா . போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்த பெண்ணின் நண்பர் ஒருவர், காவ்யாவும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல விரும்புவதாகவும், போதிய பணம் இல்லாததால், இந்த கடத்தலை அரங்கேற்றியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஒரு பொதுவான நண்பரின் அறையில் காவ்யா தனது கடத்தல் படங்களைக் கிளிக் செய்ததாகவும், மேலும் மூவரின் (காவ்யா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள்) மொபைல் போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web