பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை... கணவரின் கள்ளக்காதலால் விபரீதம்!

 
பஞ்சாப் பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சியூட்டும் தற்கொலைச் சம்பவம்  அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு முன்னணி அரசு மருத்துவமனையில் மூத்த பெண் மருத்துவராக (டாக்டர்) பணிபுரிந்து வந்தவர், இன்று காலை தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நீட்

மரணமடைந்த பெண் மருத்துவருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதே மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர் முன்னிலையில் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில் இவர்களது குடும்ப வாழ்க்கை சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், சமீபகாலமாகக் கணவரின் நடத்தையில் பெண் மருத்துவருக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், கணவர் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே பணிபுரியும் ஒரு இளம் நர்ஸுடன் (செவிலியர்) உருகி உருகிக் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.

ஆம்புலன்ஸ்

இந்த அநாகரிக விவகாரம் குறித்துப் பெண் மருத்துவர் தனது கணவரைக் கண்டித்தபோது, அவருக்கும் கணவருக்கும் இடையே வீட்டில் கடுமையான வாக்குவாதமும் தடித்த தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான அந்தப் பெண் மருத்துவர், வாழ்க்கையில் விரக்தியடைந்து   இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த பாட்டியாலா போலீசார், தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதல் கணவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக முறைப்படி வழக்குப் பதிவு செய்து, அவரை  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.