பகீர்.. கோழிப்பண்ணையில் திடீரென ஏற்பட்ட பயங்கர விபத்து.. தீயில் கருகி பலியான 3,500 கோழிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, ஆம்பூர் சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில், தரணி ராஜன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு, கோழி வளர்ப்பு செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 3-4 மணியளவில், மின் கசிவு காரணமாக இந்தப் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரியத் தொடங்கியது. தகவல் கிடைத்ததும், ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரி மெபூப், தனது ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இந்த சூழ்நிலையில், தீயை அணைப்பதற்குள், பண்ணை வீடு மற்றும் கோழிப்பண்ணை எரிந்து சாம்பலானது. 3,500 கோழிகள் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தது. மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு மற்றும் பிற பொருட்கள் தீ விபத்தில் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
