பகீர்... செல்போனால் விபரீதம்... தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவன்!

இன்றைய தலைமுறை மாணவர்களை செல்போன் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருவது பதைபதைக்க வைக்கிறது. சமூக ஊடக தலங்கள் பெரும்பாலான இளைஞர்கள், மாணவர்களின் சீரழிவிற்கும், பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் அனகாரா பகுதியில் அரசுப் பள்ளி ஒன்றில் விபரீதம் நிகழ்ந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படித்து வரும் அந்த பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்போனை கொண்டு சென்றுள்ளார். இதை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று மாணவனிடம் ஆசிரியர் கூறினார், ஆனால் சிறுவன் அதை அலட்சியப்படுத்தி செல்போனைப் பயன்படுத்தினான்.
#Kerala: In a shocking incident at Anakkara Government Higher Secondary School, #Palakkad, a 16-year-old student threatened a teacher after his mobile phone was confiscated.
— South First (@TheSouthfirst) January 21, 2025
Despite strict rules prohibiting the use of mobile phones on campus, the 11th-standard student was caught… pic.twitter.com/2dsxfS7igj
இதனால், மாணவனிடமிருந்து செல்போனை ஆசிரியர் பறித்தார். மாணவன் கோபமடைந்து ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தான், பின்னர் செல்போன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவர் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று மிகவும் கோபமாகப் பேசினார். தனது செல்போனை என்னிடம் கொடுக்குமாறு மாணவர் மிகவும் கோபமாகப் பேசினார், ஆனால் தலைமை ஆசிரியர் அமைதியாக இருந்தார். பின்னர் மாணவர் தனது செல்போனை என்னிடம் கொடுக்கவில்லை என்றால், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டினார்.
ஆனால் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்கவில்லை, மாறாக பெற்றோரை அழைத்து இந்த விஷயம் குறித்து அவர்களுக்குத் தகவல் அளித்தது. இந்நிலையில், தலைமை ஆசிரியரை மாணவர் மிரட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வருவதால், பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!