பகீர்.. மருத்துவரின் அலட்சியம்.. தகன மேடையில் இருந்து உயிருடன் எழுந்த நபர்!
ராஜஸ்தானில் இறந்ததாகக் கருதப்படும் நபர் ஒருவர் தகனம் செய்யும் மேடையில் கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள மா சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ரோஹிதேஷ், உடல்நிலை காரணமாக பகவான் தாஸ் கேதன் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
#VIDEO | Live man undergoes post-mortem in Jhunjhunu, Rajasthan; found moving on pyre after 2.5 hours in freezer. Bhajanlal government suspends 3 doctors amid nationwide shock.#Jhunjhunu #Rajasthan #Bhajanlal #Doctors #Government #Postmortem #Viralvideo pic.twitter.com/ir2NefmiIt
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) November 22, 2024
மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அன்றே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலைப் பெற யாரும் வராததால், மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைச் சான்றிதழைத் தயாரித்து, பிரேதப் பரிசோதனை செய்யாமல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரது உடல் 4 மணி நேரம் பிணவறையின் உறைவிப்பான் பெட்டியில் வைக்கப்பட்டது. அதன்பிறகு, உடலை தகனம் செய்வதற்காக ஆம்புலன்சில் போலீசார் கொண்டு சென்றனர்.
ஆனால் தகனம் மேடையில் ரோஹிதேஷ் உடல் திடீரென அசைய ஆரம்பித்ததால் அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டனர். உடனடியாக ஆம்புலன்சில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவகாரம் மாவட்ட கலெக்டருக்கு எட்டியதையடுத்து, அவர் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், ரோகிதேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்த மூன்று டாக்டர்களையும் மாவட்ட ஆட்சியர் ராமாவதர் மீனா சஸ்பெண்ட் செய்தார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். ரோஹிதேஷ் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!