பகீர்.. எலக்ட்ரிக் வாகன ஷோரூமில் பயங்கர தீ விபத்து.. பெண் பணியாளர் உடல் கருகி பலி!
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள எலக்ட்ரிக் டூவீலர் ஷோரூமில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷோரூம் முழுவதும் தீ மளமளவென பரவியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி தப்பினர்.
ஆனால், வாகன விற்பனையாளராக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம்பெண் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின. இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!