பகீர்... 4 பேரை உயிருடன் கொன்று தின்ற சிறுத்தை... உள்ளங்கை மட்டுமே கிடைத்த கொடூரம்!

 
உள்ளங்கை
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் சிறுத்தைப்புலிகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. அந்த பகுதியில் உள்ள மக்களை கொன்று தின்னும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. கடந்த 11 நாட்களில் 3 சிறுத்தைகள் இறந்த நிலையில், இரண்டு சிறுத்தைகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டன.

ஆனால் நள்ளிரவில், உதய்பூர் நகரிலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள கோகுண்டா பகுதியில் 5 வயது சிறுமியை மீண்டும் சிறுத்தை கொன்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

சிறுமியின் சிதைந்த உடலை பெற்றோர் முன்னிலையிலேயே சிறுத்தை எடுத்துச் சென்றது.

சிறுத்தை

சிறுத்தைப்புலி ஒன்று 5 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், குடும்பத்தினர் சிறுமியைத் தேடி வெளியே சென்றபோது, ​​சிறுமியின் உள்ளங்கை துண்டிக்கப்பட்டு சிறிது தூரத்தில் சடலம் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக குடும்பத்தினர் சிறுமியின் உடலை எடுப்பதற்குள், சிறுத்தை புதர்களில் இருந்து வெளியே வந்து சிறுமியின் உடலையும் அங்கிருந்து எடுத்துச் சென்றது.

சூரஜ் என்கிற 5 வயது சிறுமி பில் காலனி பகுதியில் உள்ள வாய்க்கால் அருகே கை, கால்களை கழுவி கொண்டிருந்த போது சிறுத்தை ஒன்று அவரை தாக்கியது. அங்கிருந்த மற்ற குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் சிறுமியை தேடி வந்தனர். குடும்பத்தினரும், கிராம மக்களும் சிறுமியைத் தேடி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தீப்பந்தங்களுடன் சென்றபோது, ​​சிறுமியின் துண்டிக்கப்பட்ட உள்ளங்கையைக் சாலையில் கண்டனர். அதிலிருந்து சிறிது தூரத்தில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. ஆனால் அதையும் குடும்பத்தினர் எடுப்பதற்குள் புதரில் இருந்து வெளியே வந்த சிறுத்தைக் கவ்விச் சென்றது. 

சிறுத்தை

சம்பவம் நடந்த உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரும் பலமுறை தேடியும் சிறுத்தைப்புலியின் தடயமே அந்த பகுதியில் கிடைக்கவில்லை. கடந்த 20 நாட்களில் வனப்பகுதியில் வசித்த சிறுத்தைப்புலிகள் இதுவரையில் 4 பேரை கொன்றுள்ளது. இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ராணுவம் கூட சிறுத்தையை தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் 7 சிறுத்தைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் 5 சிறுத்தைகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை. வனத்துறையின் கூற்றுப்படி, அப்பகுதியில் மொத்தம் 7 சிறுத்தைகள் இருப்பதாகவும், அதில் 2 சிறுத்தைகளை சமீபத்தில் வனத்துறையினர் பிடித்துள்ளதாகவும், இன்னும் 5 சிறுத்தைகள் பிடிபடவில்லை. என்றும், வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்திருப்பதாகவும் கூறினர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web