பகீர்.. அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய நபர்.. 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்!

பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் அரசு பேருந்து இன்று அதிகாலை 5.50 மணிக்கு வழக்கம் போல் புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் நடத்துனர் ராம்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, பேருந்தில் இருந்த ஒரு பயணியின் பையில் ஐந்து காக்கி நிற பொட்டலங்கள் காணப்பட்டன. இதைக் கண்ட நடத்துனர் உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநருக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அதிர்ச்சியடைந்த நபர் ஜன்னலிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அவர் கீழே விழுந்து காயமடைந்தார், ஆனால் பேருந்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரைப் பிடித்தனர். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா கடத்தி வந்த பாலக்காடு பகுதியைச் சேர்ந்த காஜா உசேன் (45) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 17. 800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காஜா உசேன் காயமடைந்து தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஊழியர்களின் இந்த நடவடிக்கையை பலர் பாராட்டி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!