பகீர்.. 'அல்லாஹு அக்பர்' சொல்லு.. சிறுவனை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்!

 
சஞ்சய் சிங்

மும்பை மீரா சாலையில் வசிப்பவர் சஞ்சய் சிங். இவரது 11 வயது மகன் நேற்றிரவு 9.30 மணியளவில் பால் வாங்குவதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.  அப்போது அச்சிறுவன் தனது குடியிருப்பு வளாகத்தில் ஒருவரைப் பார்த்து 'ஜெய் ஸ்ரீராம்' என்றார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் சிறுவனை தாக்கி, 'அல்லாஹு அக்பர்' என கோஷமிட வற்புறுத்தியுள்ளனர்.

அதைச் சொல்ல மறுத்த அச்சிறுவன் அதை உச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சிறுவன் தாக்கப்படுவதைப் பார்த்த குடியிருப்பாளர்களில் ஒருவர், தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனையடுத்து சிறுவனின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து மீரா ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அடையாளம் தெரியாத இளைஞர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 448, 295 ஏ, 153 ஏ, 37, 1சி மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டம் பிரிவு 135 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web