பகீர்... நடுரோட்டில் துரத்தி சென்று பள்ளி ஆசிரியர் படுகொலை... மாணவர்களுக்குத் தொடர்பா? போலீசார் விசாரணை!

 
கொலை போலீசார் மைதானம்

கர்நாட மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடுரோட்டில், பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓட ஓட காலி மைதானத்திற்கு துரத்தி செல்லப்பட்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவர்கள், இப்போதைய மாணவர்கள் என்று பள்ளி ஆசிரியருக்கு வேறு யாருடனாவது முன் விரோதம் இருந்துள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குல்லி நஞ்சய்யன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பா (47). இவர் மோதூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை ஆசிரியர் மாரியப்பா, தனது வீட்டில் இருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்று கொண்டிருந்த நிலையில், குல்லி நஞ்சய்யன்பாளையத்தில் பண்ணையில் மாரியப்பாவின் உடல் பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.

அடித்தே கொலை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக குனிகல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஏஎஸ்பி மாரியப்பா, குனிகல் டிஎஸ்பி ஓம்பிரகாஷ், இன்ஸ்பெக்டர் நவீன் கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாரியப்பாவின் தலை மற்றும் தோள்பட்டையில் பலமுறை பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டிருந்த காயங்கள் இருந்தன. அத்துடன் ஓட ஓட விரட்டி அவர் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த கொலை குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பண்ணையைச் சுற்றித் திரண்டனர்.

Kunigal PS

தனிப்பட்ட விரோதத்தின் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து குனிகல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரியப்பாவுடன் கிராமத்தில் யாருக்கும் விரோதமிருக்கிறதா, பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web