பகீர் வீடியோ... தென்காசி அருகே நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 2 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்!

 
பேருந்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகாலையில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அதிகாலையில் வேகமாக வந்த காரும் வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிப் பலத்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரில் பயணித்த இளையராஜா மற்றும் மருது ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

காரில் உடன் பயணித்த உதயசங்கர் என்பவர் பலத்த காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.