பகீர் வீடியோ... சுடுகாட்டில் எரியும் சடலத்தின் உறுப்புகளைச் சாப்பிட்ட அகோரி - இதைப் பார்க்காதீங்க!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள சுடுகாட்டில், அகோரி சாமியார் போர்வையில் திருநங்கை ஒருவர் எரியும் பிணத்திலிருந்து உடல் உறுப்புகளை எடுத்துச் சாப்பிட்ட சம்பவம் மற்றும் அது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள சக்ரதீர்த்த சுடுகாட்டிற்குள் வாளுடன் சுற்றிவந்து தன்னை 'அகோரி' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் 27 வயதான திருநங்கை காளி நந்த் கிரி என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வைரல் வீடியோவில், சில மந்திரங்களை உச்சரித்தவாறே எரியும் பிணத்தின் மீது வாளால் குத்தி, அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவர் சாப்பிடுவதும், அந்தப் பொருள் "சூடாகவும் சுவையாகவும்" இருந்ததாகக் கூறுவதும் பதிவாகியுள்ளது.

மதத்தின் பெயரால் இத்தகைய கொடூரமான மற்றும் விசித்திரமான செயல்களில் ஈடுபடுவது இந்து மதத்தின் பாரம்பரியத்தைக் களங்கப்படுத்துவதாகக் கூறி, அங்குள்ள இந்து மதத் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
