பகீர் வீடியோ... கனமழையால் இடிந்து விழுந்த பெட்ரோல் பங்க் மேற்கூரை!

 
பெட்ரோல் பங்க் மேற்கூரை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் திடீரென இடிந்து சரிந்து விழுந்தது.

மேற்கூரை இடிந்து விழுந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அதன் அருகில் வாகனங்களோ அல்லது பணியாளர்களோ இல்லாததால், மிகப்பெரிய அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.