பிரபல நடிகர் சாலை விபத்தில் பலி!! கை, கால்கள் துண்டாகி உயிரிழந்த சோகம்!!

 
லோகேஷ்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில்  தொடுப்பூர் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ். இவர் பல கன்னட திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்தவர்.   இவர் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார். இவர் ஜூலை  29ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான தொடுப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

லோகேஷ்


அவரது மோட்டார் சைக்கிள் அதிகாலை 5.15 மணி அளவில் மண்டியா மாவட்டம் எலியூர் அருகே நடுரோட்டில் கிடந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இரு கைகள், கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சடலமாக கிடந்தவர் நடிகர் லோகேஷ் என்பதும், சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்தது. ஆனால் விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. அத்துடன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த கார் மோதி இருக்கலாம் எனவும்  இதில் லோகேஷ் பலியாகி இருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

போலீஸ்


ஏனெனில் அப்பகுதியில் காரின் வாகன பதிவெண் பலகை கிடந்துள்ளது. மேலும் விபத்து நடந்ததற்கான அடையாளமும் சாலையில் தென்பட்டன. இதையடுத்து காரின் வாகன பதிவெண் பலகையின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.   விபத்தில் பலியான லோகேசின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமவனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web